கல்லூரி தொடங்கப்பெற்ற காலம் முதல் இளங்கலைத் தமிழ் வகுப்புக்கள் இடம்பெற்ற நிலையில், தற்பொழுது இளங்கலை(இரு சுழற்சிகள்), முதுகலை, எம்.ஃபில்.(முழு / பகுதி நேரம்), பிஎச்.டி.(முழு / பகுதி நேரம்) என அனைத்தும் உடையதாகத் திகழ்கிறது தமிழ்த்துறை.
துறையில், ஏழு இணைப்பேராசிரியர்களும் பத்து உதவிப்பேராசிரியர்களும் ஆறு கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களுள் இருபத்திரண்டு பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பேராசிரியர்கள் மாநில, பன்னாட்டு அளவிலான கருத்தரங்களில் ஒவ்வோராண்டும் கலந்து கொள்வதோடு நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.
இதுவரை அறுபது பேர் முனைவர் பட்டமும் நூற்றுக்கு மேற்பட்டோர் எம்.ஃபில். பட்டமும் பெற்றுள்ளனர். ஒவ்வோராண்டும் நூற்றுக்கு மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களைப் பட்டதாரிகளாக உருவாக்குவதில் பெருமை கொள்கிறது ஈ.வெ.ரா. கல்லூரியின் தமிழாய்வுத்துறை.